Translate

Sunday, 24 December 2017

தியானப் பயிற்சியினைத் துவக்குவதற்கு எட்டு குறிப்புகள்

தியானப் பயிற்சியினைத் துவக்குவதற்கு எட்டு குறிப்புகள் (Meditation tips for beginners in tamil)

தியானத்திற்கு முன்னர் தயார் நிலையினை அடைய சிறிது நேரம் எடுத்துக் கொண்டால் உண்மையில் ஆழ்ந்த தியான அனுபவத்தினை அடையலாம் என்று உங்களுக்குத் தெரியுமா ?
1- வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள் | Choose a Convenient Time
தியானம் என்பது இளைப்பாறும் நேரம். ஆகவே அது முற்றிலும் உங்களுக்கு வசதியான நேரமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது செய்யும் தியானத்திற்குப் பின் வருகின்ற தியானங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.அந்நேரத்தில் நீங்கள் யாராலும் தொல்லைப் படுத்தப் படாமல் நன்கு இளைப்பாறி மகிழ்வதற்கு உகந்த நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.
2- நல்ல இடத்தைத் தேர்ந்தெடுங்கள் | Choose a Quiet Place         
நல்ல நேரத்தைப் போன்று தொந்தரவில்லாத நல்ல இடத்தைத் தேர்ந்தெடுங்கள்.
  நிசப்தமான அமைதியான சூழல் உள்ள இடம் நல்ல இளைப்பாற்றலையும் மகிழ்ச்சியான தியான அனுபவத்தையும் தரும்.

3- வசதியான வகையில் அமர்ந்து கொள்ளுங்கள் |Sit in a Comfortable Posture
உங்கள் தோற்றப் பாங்கு முக்கியமானது. தளர்வாக வசதியாக அசையாமல் அமர்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.முதுகுத் தண்டு நேராக, தோள்களும் கழுத்தும் தளர்வாக, கண்கள் மூடியபடி, தியானம் முழுமையும் அமர்ந்திருங்கள்.
4- வயிறு காலியாக இருக்கட்டும் | Keep a Relatively Empty Stomach
உணவு உண்பதற்கு முன்னர் தியானம் செய்வது நல்லது.
  உணவிற்குப் பிறகு தியானம் செய்தால், கண்ணயர்ந்து விடலாம்.ஆயினும், மிகுந்த பசியுடன் தியானம்வற்புறுத்திச் செய்ய வேண்டாம்.ஏனெனில் பசியால், தியானம் முழுமையும் உணவைப் பற்றிய சிந்தனை எழக் கூடும் !   ஆகவே உணவு உண்டு, இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் தியானம் செய்யலாம்.
5- சில உடல் தளர்ச்சிப் பயிற்சிகளைச் செய்யுங்கள் | Start With a Few Warm-ups
சில சூக்ஷ்ம யோகப் பயிற்சிகள் சோம்பலை விலக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலை லேசாக உணரவைக்கும்.
நீண்ட நேரம் அசையாமல் அமர்வதற்கு உங்களால் முடியும்.

 

6- சில நீண்ட ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விடுங்கள் |Take a Few Deep Breaths
இதுவும் எளிதான தியானத்திற்கு தயார் நிலையினை ஏற்படுத்தும். ஆழ்ந்த மூச்சு உள்ளே, வெளியே விடுவதும், நாடி சோதன் ப்ராணாயாமம் செய்வதும் நல்லது.
இது மூச்சுத் தாளத்தை சீராக்கி, மனதை அமைதியான தியான நிலைக்கு அழைத்துச் செல்லும்.

7- முகத்தில் ஓர் மெல்லிய புன்முறுவல் இருக்கட்டும். |Keep a Gentle Smile on Your Face
இது முக்கியமானதுதியானம் முழுவதும் நீடித்திருக்கும் இம்மெல்லிய புன்னகை உங்களைத் தளர்வாக வைத்து, உங்கள் தியான அனுபவத்தை மேம்படுத்தும்.

8- கண்களை மெதுவாக திறங்கள் |Open Your Eyes Slowly and Gently
தியானத்தின் இறுதிக்கு வந்ததும், அவசரமாகக் கண்களைத் திறந்து, இங்குமங்கும் செல்ல வேண்டாம். சற்று நேரம் எடுத்துக்கொண்டு,உங்களையும் சுற்றுப் புறத்தையும் மெதுவாக உணர்ந்து கொண்டு மிக மெதுவாகக் கண்களை திறக்கலாம்.


No comments:

Post a Comment

வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள்...