Translate

Sunday, 24 December 2017

உளவியல் அடிப்படையில் சமூகத்துடம் உள்ள தொடர்பு

  ஒவொரு தனிமனிதனின் ஒன்றுகூடலின் இருதிக்கட்டமே சமூகம் சமூகமானது ஒவொரு தனிமனிதனையும் உற்று நோக்கியவண்ணம் உள்ளது. ஒரு தனிமனிதனைப்பற்றிய தகவல்களை முழு சமூகமும் கவனிக்கா விட்டாலும்  ஒரு குறிப்பிட்ட சிறு குழுவாகினும் கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

சமூகம் இப்படி உத்துநோக்கி கவனித்துக்கோடு இருப்பதில் ஓரிரு நன்மைகள் இருந்தாலும் அதிகபடியான தீமைகளே  காணப்படுகின்றது. அந்த வகை தீமைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இந்த பதிவு பெரிதும் உதவும் என நான் நம்புகிறேன்.

  வ்வொரு தனிமனிதர்களின் தன்மையும் அவரவர் வாழும்

சூழல் 
குடும்ப பழக்கவழக்கம் 
படிப்பறிவு 
சமய ஈடுபாடு 
தொழில் 
போன்ற பல்வேறு காரணிகளால் வேறுபட்டே காணப்படும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க உண்மை  இதில் மிக பிரதானமாக
காணப்படுவதுதான் " மரபணுக்களின் செல்வாக்கு " உதாரணமாக சொல்லப்போனால் ஒரு ஒழுக்மாக வாழும்  குடும்பத்தில் ஒழுக்கமே தெரியாத குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து வந்தால்
ஒழுக்கமான குடும்பத்தில் உள்ள ஒரு சில குணாதிசயங்கள் இருந்தாளும் அந்த குழந்தை எந்த குடும்பத்தில் பிறந்ததோ அந்த குடும்பத்தில் உள்ள பண்புகளும் கலந்தே இருக்கும் .

  இவ்வாறான வெவ்வேறு பட்ட பண்புகளுடன் அல்லது தன்மைகளுடன் மனிதர்கள் சமூகத்தில் காணப்படுகின்றனர்.

  எது எவ்வாறாக இருந்த போதிலும் நாம் உலவியம் பயிலும் மாணவர் என்ற ரீதியில் சமூகத்துடன் நாம் எவ்வாறான முறையில் தொடர்பினை எற்படுத்திக்கொள்வது .

   சரி சமூகம் ஒரு தனிமனிதனை எப்படி பார்க்கின்றது என்பதை நாம் முதலில் அவதானிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் வழமையாக அணியும் ஆடைவகைகளை விட சற்று புதிய ஆடைகளை அணிந்க்தால் உங்கள் அயலவர்கள் உங்களிடம் " வெளியூர் பயணமா ??  , சொந்தகாரர் வீட்டில் விசேசமா ?? " போன்ற கேள்விகளை உங்களிடம் கேட்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அப்படியென்றால் உங்களிடம் கேள்வி கேட்ட மனிதனையும் சேர்த்து இன்னும் கேள்வி கேட்க்க இருக்கின்ற , கேள்விகேட்க்காமல் மனதுக்குள் எண்ணிக்கொள்ளும் பலர் உங்களை அவதானித்திருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை .

  கொஞ்சம் தலையை தொங்கப்போட்டு முகத்தை சுருட்டிக்கொண்டு ஒரே இடத்தில் இருந்து பாருங்க குறைந்தது நாலைந்து பேராவது வந்து என்னப்பா மனசுல கவலையா?? , உடம்புக்கு சரியில்லையா?? , ஏதாச்சும் முக்கியம்மனத்தை துளைச்சிட்டியா ??  என்று கேட்ப்பங்க அதிலிருந்து விளங்கும் அந்த நாலைந்து பெரும் அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட பேராவது உங்களை கவனித்திருக்கிராங்க என்பது. so சமூகம் எப்பவுமே நம்மளை நமக்கு தெரிந்தோ , தெரியாமலோ  கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

  நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலையும் சமூகம் கவனித்து நாம் ஒருசெயலை எதற்க்காக செய்கின்றோம் , கவலையின் போது எப்படி இருப்போம் , சந்தோசத்தின் போது எப்படி இருப்போம் , ஒரு விஷயத்தை மறைக்கும் பொது நம் முகபாவனை எப்படியிருக்கும் , நமக்கு கோபம் வந்தால் நாம் எப்படி நடந்து கொள்வோம்என்றல்லாம் சமூகம் விளங்கி வைத்திருக்கும். இது சமூகத்தின் தவரல்லா  நமது அறியாமை சரி பரவாயில்லை கடந்தகாலங்களை விட்டுத்தள்ளுங்கள் .

  பொதுவாக சிலவிடயங்கள் சமூகபார்வையில் அளவு கோளால இருக்கும் அதை நாம் கண்டறிய வேண்டும் அது ஒவ்வொரு சமூகத்துக்கும் வித்தியாசப்படும் உதாரணமாக ஒரு சமூகத்தில் பட்டு வேஷ்டி , பட்டு சட்டை உடுத்தியிருந்தாள் அதை கௌவ்ரவமாக நினைத்து மதிப்பளிப்பார்கள் , அதே வேலை மற்றுமொரு சமூகத்தில் official ஆடைகளுக்கு மதிப்பளிப்பதுண்டு இந்தமாதிரியான சமூக அளவுகோல்கள் நிறையவே உண்டு. அது அந்தந்த சமூகத்தை பொறுத்து வேறுபாடும் .

  ஆகவே நாம் வாழும் சூழலில் உள்ள சமூக அளவை கண்டறிந்து அதற்க்கேற்றவாறு  நம் பலக்கவலக்கங்க்களை மாற்றிக்கொள்வது சிறந்தது .

  அடுத்தது பொதுவான சில சமூக அளவு கோள்கள் உண்டு அதனை எல்லோருமே பின்பற்ற முடியும்.

 படித்த மாமேதைகள் / அறிவாளிகள் இருக்கும் இடங்களில் அநாகரிகமான முறையில் உடைகளை அணிந்திருத்தல்.
ஒரு அலுவலகத்தில் அல்லது அறிவாளிகள் குவிந்து காணப்படும் இடங்களில் ஒருவருடன் கதைக்கும் போது தலையை சொரிந்து கொண்டே கதைத்தல்
கையில் வைத்திருக்கும் பேனாவை வாயில் வைத்து கடித்தல், தலைக்குள் விட்டு சொரிதல் 
ஒரு அலுவலகத்தில் அல்லது அறிவாளிகள் குவிந்து காணப்படும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட ஒருவரின் செயலை அல்லது ஒரு பொருளை உற்று கவனித்துக்கொண்டு இருத்தல்
தெரியாத மொழியை தெரிந்தமாதிரி தப்புதப்பாக கதைத்தல்
பலர் இருக்கும் போது ஒரு விடயத்தை பலரிடமும் அடிக்கடி விளக்கம் கேட்டல் இது அனைவரின் பார்வையும் நம் பக்கம் சுலபமாக திருப்பிவிடும் .
  இவ்வாறான செயல்கள் எம்மை தரம் தாழ்த்தி காட்டிவிடும் so நாம் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்மை சரி செய்து கொள்வது நல்லது

நம் உடலமைப்புக்கு ஏற்றவாறு முடிவேட்டுதல் , சவரம் செய்தல் , சிலருக்கு அளவாக தடி வைத்திருப்பது கருகட்ச்சிதமாக பொருந்தும் அவ்வாறானவர்கள் அவர்கில் உடலமைப்புக்கு ஏற்றவாறு தாடிகளை வைத்துக்கொள்ளல் , நமது உடலமைப்புக்கு ஏற்றமாதிரி ஆடைகளை உடுத்திக்கொள்ளல் , ஆடை பொருத்தப்பாடு அதாவது எந்த உடைக்கு என்ன செருப்பு  போன்ற பொருத்தப்பாடு  சமூகத்தால் ஏற்ப்படுத்தி வைத்திருக்கும் அளவுகோலுக்கு அமைய நம் நடை உடை பாவனையை மாற்றிக்கொள்வது சாலச்சிறந்தது

இவ்வாறான சிறு சிறு விடயங்களை நாம் கவனத்தில் கொள்வது சமூகத்தின் பார்வையில் எம்மை சிறந்தவராக காட்டிக்கொள்ள முடியும்.


உங்களின் கருத்தை பதிவு செய்யவும்.



No comments:

Post a Comment

வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள்...