Translate

Monday, 25 December 2017

நீ யார்?


அறிவுலக மேதை, ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி  ரலியல்லாஹு அன்ஹு



தொகுப்பு: அஹ்மத் பிலால்​​

​நீ எங்கிருந்து வந்தாய்? இங்கே சில காலம் நீ தங்கியிருப்பதன் நோக்கம் யாது?
உன் உண்மையான மகிழ்வும், துயரமும் எதில் அடங்கியுள்ளன? உன் பண்புகளில் சில மிருகங்களிடம் உள்ளவை. மற்றும் சில மலக்குகளிடம் உள்ளவை.
பண்புகளில் எவை தற்செயலானவை, எவை இன்றியமையாதவை என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றை நீ அறிந்துகொள்ளாத வரை, உன் உண்மையான இன்பம் எங்குள்ளது என்பதை நீ கண்டுகொள்ள மாட்டாய்.
​உண்பதும், தூங்குவதும், கலவி புரிவதும், சண்டையிடுவதும் மிருகங்களின் தொழில்கள். நீயும் ஒரு மிருகமாயின், இவ்விஷயங்களிலேயே ஈடுபட்டுக்கொண்டிரு.
விஷமம் செய்வதும், ஏமாற்றுவதும், பித்தலாட்டம் செய்வதும் ஷைத்தான்களின் வேலை. நீயும் அவர்களை சார்ந்தவனாயின், இக்காரியங்களில் உன்னை மூழ்கடித்துக்கொள்.
இறைவனின் சாத்மீக சௌந்தரியத்தை தீர்மானிப்பதும், மிருக இயல்புகளே இல்லாதிருப்பதும், மலக்குகளின் இயல்பாகும். நீயும் இத்தகைய மலக்குமார்களின் இயல்பை உடையவனாயின் உன் மூலஸ்தானம் பற்றி அறியும் முயற்சியில் ஈடுபடு.
இறைவனை அறிந்து தியானிக்கவும், ஆசை, விருப்பம், கோபம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடவும் அதுவே இந்த வழியாகும்.
இச்சை, கோபமாகிய இரண்டுவகை மிருக இயல்போடு நீ படைக்கப்பட்ட நோக்கம் யாது? அவை உன்னை வெற்றிகொண்டு அவை உன்னை கைதியாக நடத்தவா? அல்லது நீ அவற்றை ஒடுக்கி உன் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அவற்றுள் ஒன்றை உன் வாகனமாகவும்,


மற்றதை உன் ஆயுதமாகவும் ஆக்கிக்கொள்வதற்காகவா? என்பதையும் நீ தேர்ந்தெடுக்க வேண்டும்.


✿ பிடிச்சா  கமண்ட் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...

No comments:

Post a Comment

வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள்...